சென்னிமலை: ஒரு ஏக்கர் சம்பங்கி மலர் சாகுபடி செய்து, தினமும், 500 ரூபாய்
வரை வருவாய் பார்க்கிறார் முகாசிபுலவன்பாளையம் பஞ்சாயத்து தலைவி ராதிகா.
சென்னிமலை யூனியன், முகாசிபுலவன்பாளையம் பஞ்சாயத்து தலைவராக இருப்பவர்
ராதிகா; விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். உள்ளாட்சி தேர்தல் வரை தீவிர
விவசாயியாகத்தான் இவரை, அனைவருக்கும் தெரியும். காய்கறி, மஞ்சள், வாழை,
கரும்பு போன்ற பயிர்களை சாகுபடி செய்து வந்த இவர், எட்டு மாதங்களுக்கு
முன், தோட்டக்கலை துறை அதிகாரிகளின் அறிவுறுத்தல் பேரில், ஒரு ஏக்கரில்
சம்பங்கி மலர் சாகுபடி செய்தார். தற்போது, சம்பங்கி மலர்கள்
பூத்துக்குலுங்கி மணம் வீசுகிறது.
தினமும் காலை 5 மணிக்கே சம்பங்கி மலர் அறுவடையை துவக்கி விடுகிறார். பத்து
கிலோ வரை அறுவடையாகிறது. கிலோ 50 ரூபாய்க்கு, வெள்ளோடு பூவியாபாரிகள்
வாங்கிச் செல்கின்றனர். பூ வியாபாரத்தில் தினமும், 500 ரூபாய் வரை வருமானம்
பார்த்து வருகிறார் ராதிகா.
அவர் கூறியதாவது:மற்ற பயிர்களை விட, அதிக வருமானம் தரும் தோட்டப்பயிராக
சம்பங்கி உள்ளது. தேர்தல் சமயத்தில் வயலை சரியாக பராமரிக்கவில்லை அதனால் பூ
அறுவடை குறைந்துள்ளது. நன்றாக பாரமரிப்பு செய்திருந்தால், தினமும் 15 கிலோ
வரை பூ கிடைக்கும். இன்னும் இரண்டு ஆண்டுகளில் விதை கிழக்கு எடுக்கலாம்.
அது, 15 ரூபாய் வரை விலை போகிறது. சம்பங்கி சாகுபடி செய்து கொஞ்சம்
உழைத்தால் போதும்; நல்ல வருமானம் பார்க்க முடியும், என்றார்.சம்பங்கிக்கு
மானியம்
சென்னிமலை தோட்டக்கலை உதவி இயக்குநர் ராமசுப்பிரமணியம் கூறியதாவது:வாசனை
திரவியம், மாலை, பூச்செண்டு தயாரிக்க, சம்பங்கி மலர்கள் பெருமளவில்
பயன்படுகிறது. இப்பூக்கள் இரண்டு வாரம் வரை வாடாது. ஏற்றுமதிக்கு ஏற்ற
மலர். மே முதல் ஆகஸ்ட் மாதம் வரை பயிர் செய்யலாம், அனைத்து வகையான
நிலங்களிலும் வளரும்.
ஹெக்டேருக்கு இரண்டு லட்சம் ரூபாய் வரை சாகுபடி
ஹெக்டேருக்கு இரண்டு லட்சம் ரூபாய் வரை சாகுபடி
செலவாகும். முதல் ஆண்டில், 20 டன் மகசூலும், இரண்டாம் ஆண்டில், 25 டன்
மகசூலும் கிடைக்கும். தேசிய தோட்டக்கலை இயக்கத்திட்டத்தில், சம்பங்கி
சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு, 45 ஆயிரம் ரூபாய் மானியம்
வழங்கப்படுகிறது, என்றார்.
thanks to dinamalar
No comments:
Post a Comment