Tuesday, February 04, 2014

சம்பங்கி சாகுபடி விவசாயிகளுக்குரூ.21 லட்சம் மானியம்

திருவாலங்காடு:ஒன்றியத்தில் சம்பங்கி பூ சாகுபடி செய்யும், 47 விவசாயிகளுக்கு, 21.78 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டது.திருவாலங்காடு ஒன்றியத்தில், திருவாலங்காடு, வீரராகவபுரம், கணேசபுரம், புளியங்கொண்டா, கூடல்வாடி, வேணுகோபாலபுரம், ஜாகீர்மங்கலம் ஆகிய பகுதிகளில், 80 எக்டேர் பரப்பளவில் சம்பங்கி பூக்கள் பயிரிடப்பட்டு உள்ளது.உயர் தொழில்நுட்ப உற்பத்தி திறன் திட்டத்தின் கீழ், சம்பங்கி பூக்கள் சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு, ஒரு எக்டேருக்கு, 7,500 ரூபாய் வீதம், தோட்டக் கலைத்துறை சார்பில் மானியம் வழங்கப் படுகிறது.அதன்படி, 2011-12ம் ஆண்டில் இத்திட்டத்தின் கீழ், 47 விவசாயிகளுக்கு மானியமாக, 21.78 லட்ச ரூபாய் வழங்கப்பட்டது. இவ்விழா திருவாலங்காடு ஒன்றிய அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. விழாவில், மாவட்ட தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் ரஞ்சன்பால், ஒன்றிய சேர்மன் குணாளன் கலந்துகொண்டு, விவசாயிகளுக்கு மானியத் தொகைக்கான காசோலைகளை வழங்கினர்.
thanks to dhinamalar

No comments: