Tuesday, January 28, 2014

தேனீ வளர்ப்பு

• தேனீ வளர்ப்பு • விவசாயிகள், கூடுதல் வருமானத்திற்கு, விவசாயம் சார்ந்த தேனீ வளர்ப்பை,கையாளலாம் • தேனீ’க்கள், மலர்த்தேனை சேகரித்து, தேனாக மாற்றி, அதை தேன் கூட்டில் சேமிக்கும். • தேன் மற்றும் அதை சார்ந்த பொருட்களின் உபயோகம் அதிகரித்து வருவதால்,தேனீ வளர்ப்பு ஒரு தொழிலாக முக்கியமடைந்துள்ளது. • தேனீ வளர்ப்பில், தேன் மற்றும் மெழுகு, முக்கியமான வெளீயீட்டு பொருள்கள் ஆகும் • தேனீ வளர்ப்பின் சிறப்பம்சங்கள் • தேனீ வளர்ப்பிற்கு, குறைந்த நேரம், பணம் மற்றும் கட்டமைப்பு மூலதனமேதேவைப்படும் • தேனீ வளர்ப்பு, வேறு எந்த விவசாய செயலுக்கான வளங்களுடனும் போட்டியிடாது • பூக்களுக்கு மகரந்த சேர்க்கைக்கு உதவுவதால் பயிர்களில், மகசூல் அதிகரிக்க வாய்ப்புள்ளது • தேனீ வளர்ப்பு, தனி நபராலோ அல்லது குழுவாகவோ தொடங்கப்படலாம் • தேன் மற்றும் மெழுகிற்கு சந்தையில் தேவை இருக்கிறது • உற்பத்தி முறை • தேனீக்களை வீட்டிலோ அல்லது பண்ணைகளிலோ, பெட்டிகளில் வளர்க்கலாம் • தேனீ வளர்ப்பதற்கு தேவையான உபகரணங்கள் • கூடு • இது, ஒரு சாதாரண பெட்டியாகும். இதன் மேல் வாட்டில், பல அடுக்குகளை கொண்டுள்ளது. • தேனீக்கள் உள்ளே நுழைவற்கு 1 செ.மீ அகலமுடைய ஓட்டைகளை கொண்டுள்ளது. • புகைப்பான் • இது தேனீ வளர்ப்பில், இரண்டாவது முக்கிய உபகரணம் ஆகும். • இதை, சிறிய தகரடப்பாவில் இருந்து செய்து கொள்ளலாம். • இதனை தேனீக்களை கட்டுபடுத்துவதற்கும் மற்றும் தேனீக்கள் நம்மை கடிக்காமல் இருப்பதற்கும் பயன்படுத்தலாம். • துணி • கத்தி • இறக்கை • தேனீக்களின் வகைகள் • இந்தியாவில் மலை தேனீ (ஏபிஸ் டார்சேடா) இவை சிறந்த தேன் சேகரிக்கும் வகைகள். சராசரியாக, ஒரு காலணிக்கு 50-80கிலோ தேன் கிடைக்கும். • சிறு தேனீ (ஏபிஸ்ப்லோரியா) · இவை ஓரு காலனியில், 200 - 900 கிராம் தேனை சேகரிக்கும் வகைகள் • இந்தியத் தேனீ (ஏபிஸ் செரானா இன்டிகா) · இவை சராசரியாக தேனை சேகரிக்கும் வகை. · ஒரு வருடத்தில், தலா ஒரு காலணியில், 6 -8 கிலோ தேனை சேகரிக்கும். • கொடுக்கற்ற தேனீ (ட்ரைகோனா இரிடிபெனிஸ்): • இவைகளுக்கு, கொடுக்குகள் சரியான முறையில் வளர்ந்து இருக்காது. • மகரந்த சேர்க்கையில் அதிக திறன் கொண்டவைகள். • இவைகள் ஒரு வருடத்திற்கு, 300-400 கிராம் தேனை சேகரிக்கும். • தேன்கூடுகளை நிறுவும் முறை • தேன் வளர்க்கும் இடமானது, • நல்ல வடிகால் வசதியையுடைய திறந்த இடங்களாகவும், குறிப்பாக பழத்தோட்டத்திற்கு அருகாமையிலும், • மேலும் நிறைய மதுரம், மகரந்தம் மற்றும் நீர் கிடைக்கக்கூடிய இடமாகவும் இருக்க வேண்டும். • சூரிய ஒளியிலிந்து பாதுகாப்பு • எறும்பு ஏருவதை தடுக்க வேண்டும் • வெயில் மற்றும் மழையிலிருந்து பாதுகாக்கும் வகையில் தேனீக்களின் காலனிகளை அமைக்க வேண்டும். • தேனீக்களின் காலனிகளை, கால்நடைகள், • ஏனைய விலங்குகள் , • பரபரப்பான வீதிகள் மற்றும் • தெரு விளக்குகள் இவைகளிலிருந்து தூரத்தில் அமைக்க வேண்டும். • தேனீ காலனிகளை அமைக்கும் முறை · தேனீ காலனிகளை அமைக்க இயற்கையான கூட்டில் உள்ள தேனீக்களை மாற்றவோ அல்லது வழி செல்லும் தேனீக்களை கவரவோ செய்ய வேண்டும். · இதற்கு முன்பு, பெட்டிகளை பழைய கூட்டின் உதிரிகளை கொண்டோ அல்லது தேனீ மெழுகினைக் கொண்டோ தடவினால் பெட்டியானது தேனீக்களுக்கு பழக்கப்பட்ட வாசனையை உடையதாக அமைக்கப்படும். · முடிந்தால், இராணீ தேனீயை பிடித்து கூட்டினுள் வைத்தால், இது ஏனையதேனீக்களை கவர்ந்து இழுக்கும். • அதிக நெரிசலை தவிர்க்கவும் · சில வாரங்களுக்கு பாதி கப் சுடுநீரில் பாதி கப் சர்க்கரையை கலந்துதேனிக்களுக்கு உணவு அளிப்பதன் மூலம் பெட்டியுனுள், வேகமாக கூட்டினை கட்ட இயலும். • காலனி நிர்வாகம் • தேன் அதிகமாக கிடைக்கும் காலங்களில், வாரம் ஓரு முறை அதிகாலை வேளையில், பெட்டிகளை கண்காணிப்பது அவசியம். • பெட்டியினை, கூரை, உற்பத்தி அறை, தளம் என்ற முறையில் சுத்தம் செய்ய வேண்டும். • வலிமையான ராணீ தேனீ, உற்பத்தி மேம்பாடு, தேன் மற்றும் மகரந்த சேகரிப்பு, • ராணீ தேனீயின் அறை, தேனீக்களின் வலிமை, • ஆண் தேனீயின் வளர்ச்சி ஆகியவற்றை கண்காணிக்க தேனீக்களின் காலனிகளை தவறாமல் சோதிப்பது அவசியம். • தேனீயின் எதிரிகளின் தாக்குதல் இருக்கிறதா, என்று சோதிக்க வேண்டும். • மெழுகு மாத் : பெட்டியிலுள்ள புழு, பட்டு வலைகளை நீக்க வேண்டும். • மெழுகு வண்டு : வளர்ந்த வண்டுகளை சாகடிக்க வேண்டும். • மைட் : புதிதாக தயாரித்த பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசலில் நனைக்கப்பட்ட பஞ்சுத் துண்டை கொண்டு, பிரேம் மற்றும் தரைகளை சுத்தம் செய்ய வேண்டும். • தேன்குறைவாக கிடைக்கும் காலத்தில் நிர்வாகம். • தேன் கூடு அமைக்க தேவைப்படும் அடிப்படை தகட்டை அகற்றி, இளம் வளமான தேனீக்களை உற்பத்தி அறையில் கூட்டாக வைக்கவும் • ராணி தேனீ மற்றும் ஆண் தேனீ செல்கள் தென்பட்டால் அழிக்கவும் · ஒரு காலனிக்கு, 200 கிராம் என்ற விதத்தில் சர்க்கரை கரைசல் (1:1) இந்தியதேனீக்களுக்கு வாரம் ஒரு முறை அளிக்கவும் · எல்லா காலனிகளுக்கும், ஒரே சமயத்தில் அளிப்பதன் மூலம் திருட்டை தவிர்க்கலாம். • தேன்நிறைய கிடைக்கும் காலங்களில் நிர்வாகம் · இக்காலத்திற்கு முன்னரே, காலனிகளை தகுந்த வலிமையுடன் வைத்து இருக்க வேண்டும் · · தேன் கூடு அமைக்க தேவைப்படும் முதல் அடிப்படை தகடு மற்றும் இளம் தேனீக்கள் இருக்கும் அறைகளிடேயே தகுந்த இடைவெளி அளிக்க வேண்டும் · இளம் தேனீக்கள் இருக்கும் அறையிலேயே ராணி தேனீ இருக்குமாரு செய்ய வேண்டும், · · தேன் கூடு அமைக்க தேவைப்படும் முதல் அடிப்படை தகடு மற்றும் இளம் தேனீக்கள் இருக்கும் அறைக்கிடையே இராணி தேனீ பிரிப்பான் தாளை இடவும் • காலனி வாரம் ஒரு முறை சோதித்து, தேன் அதிகமுள்ள பிரேம்களை தேன் கூடு அமைக்க தேவைப்படும் அடிப்படை தகட்டின் பக்கவாட்டிற்கு, எடுத்து செல்ல வேண்டும். • எந்த ஒரு பிரேமில், 3\4 பாகம் தேன், 1\4 பாகம் மூடப்பட்ட அறைகள்,இருக்கிறதோ அதனை உற்பத்தி அறையிலிருந்து வெளியே எடுத்துவிட்டு அந்த இடங்களில் காலியான பிரேம்களை இட வேண்டும் • எந்த ஒரு கூடுகள் முழுவதுமாக மூடப்பட்டு அல்லது 2\3 மூடப்பட்டு இருக்கிறதோ, அவைகளை தேன் எடுப்பதற்கு எடுத்து கொள்ளலாம் • தேன் அறுவடை • எந்த பகுதிகள் அறுவடைக்கு தயாரோ, அந்த பகுதிகளுக்கு புகையை அடித்து,தேனீக்களை விரட்டி அறுவடை செய்ய வேண்டும் · பொதுவாக, இரண்டு முக்கிய பூக்கும் காலங்களான அக்டோபர்/நவம்பர் மற்றும்பிப்ரவரி - ஜூன் மாதங்களிலும், அதற்கு சற்றே பின்பு வரும் மாதங்களிலும் அறுவடை செய்யலாம் • அறுவடைக்கு தயரான கூடுகள், வெளிர் நிறத்தில் தேன் நிரப்பப்பட்டு இருக்கும்.பாதிக்கும் மேல் அரைகள் மெழுகினால் மூடப்பட்டு இருக்க

No comments: