Wednesday, January 29, 2014

பஞ்சகவ்யம்


பஞ்சகவ்யம் எப்படி தயாரிப்பது? தேவையான பொருட்கள்: பசுஞ்சாணம்-5 கிலோ, பசுவின் கோமியம்-3 லிட்டர், பசும்பால்-2 லிட்டர், பசு தயிர்-2 லிட்டர், பசு நெய்-1 லிட்டர், கரும்புச்சாறு-1 லிட்டர், தென்னை இளநீர்-1 லிட்டர், வாழைப்பழம்-1 கிலோ. தயாரிப்பு முறை பசுஞ்சாணம் 5 கிலோவுடன் பசுமாட்டு நெய் 1லிட்டர் கலந்து பிசைந்து ஒரு பிளாஸ்டிக் வாளியில் 3 நாட்கள் வைத்து தினமும் ஒரு முறை பிசைந்துவிட வேண்டும். 4வது நாள் மற்ற பொருட்களுடன் இவைகளை ஒரு வாயகன்ற மண்பானை அல்லது சிமென்ட் தொட்டி அல்லது பிளாஸ்டிக் தொட்டியில் இட்டு கையால் நன்கு கரைத்து கம்பிவலையால் மூடி நிழலில் வைக்க வேண்டும். ஒரு நாளைக்கு 2 முறை வீதம் காலையிலும் மாலையிலும் 20 நிமிடங்கள் நன்றாக கலக்கிவிட வேண்டும். இது பிராண வாயவை பயன்படுத்தி வாழும் நுண்ணுயிர்களின் செயல்திறனை ஊக்குவிக்கிறது. இந்த முறையில் 15 நாட்களில் பஞ்சகவ்யா தயாராகிவிடும். பஞ்சகவ்யம் நன்மைகள் என்ன? 1.பஞ்சகவ்யாவை பயன்படுத்தி விதைநேர்த்தி செய்வதால் விதையின் முளைப்புத் திறன் மற்றும் வீரியத்தன்மை மேம்படுகிறது. 2.பஞ்சகவ்யம் பயிர் வளர்ச்சியை ஊக்குவிக்கும் உயிர் திரவமாகவும் பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கு எதிர்ப்பாற்றலை அளிக்கும் காரணியாகவும் விளங்குகிறது. 3.பயிர்களுக்கு தேவையான தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்கள், நுண்ணூட்டச் சத்துக்கள் பஞ்சகவ்யாவில் உள்ளன. 4.பசுமாட்டின் கோமியத்தில் உள்ள யூரிக் அமிலமானது உரம் மற்றும் ஹார்மோன்களாக செயல்படுகின்றன. 5.பஞ்சகவ்யாவில் உள்ள லேக்டோபேசில்லஸ் போன்ற நுண்ணுயிர்கள் அங்கக அமிலங்களையும் நோய் எதிர்ப்பு பொருட்களையும் உற்பத்தி செய்வதோடு பயிர் வளர்ச்சி ஊக்கியாகவும் செயல் படுகிறது. 6.தென்னை இளநீரானது பயிர்களின் பச்சையத்தை அதிகப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

1 comment:

Anonymous said...

பயனுள்ள பதிவு. நன்றி !