Wednesday, October 15, 2014

Sunday, May 11, 2014

வாழை

  • பழுக்காத வாழை இலையை பெரிய கலனில் / பாத்திரத்தில் இட்டு, ஊதுபத்தி கொளுத்தி அதன் மூடியை போட்டுவிட்டால், 12 மணி நேரத்திற்குள் பழுத்துவிடும்.
  • விரைவில் வாழைக் குலையை பழுக்க வைக்க, சுண்ணாம்பு கரைசலை அதன் மீது தெளித்தால் போதும்.
  • இலகுவாக பழுக்க வைக்க, குலைகளில் ஆங்காங்கு வேப்பிலையைச் சொருகினால் போதுமே.
  • 25 கிராம் வேப்பம் புண்ணாக்கு மற்றும் ஆமணக்கு புண்ணாக்கு கலந்து கலவையை ஒவ்வொரு மரத்தை நட்ட 6ம் நாளில் சுற்றிலும் இட்டால் பூச்சி தாக்குதல் கட்டுப்படுத்தும்.
  • இலைப்புள்ளி நோயைக் கட்டுப்படுத்த, நீர்த்த புகையிலை கரைசலை தெளிக்கலாம்.
  • அரை அடி உயரமுள்ள இரண்டரை கிலோ எடையுள்ள கிழங்கை விதைக்க பயன்படுத்தவேண்டும்.
  • கிழங்கு அழுகல் நோயை தடுக்க, வாழைக் கிழங்கை 100 லிட்டர் தண்ணீரில் 1 லிட்டர் வேப்ப எண்ணெய் கலந்த கரைசலில் மூழ்கவைத்து பின் நடவு செய்யப்பயன்படுத்த வேண்டும்.
  • கடலை புண்ணாக்கு இட்டால் வாழையை அதிக மகசூல் கிடைக்கும்.
  • வாழைக் குலையைச் சேமிக்கும் போது, ஏற்படும் வாழைப்பழ அழுகலை கட்டுப்படுத்த, வாழைக் குலை காம்பை 10 % துளசி இலைச்சாறு கரைசலிலோ 1% வேப்ப எண்ணெய் கரைசலிலோ நனைத்து பின் சேமிக்கவேண்டும்.
  • செண்டு மல்லியை வாழைத் தோட்டத்தைச் சுற்றி நட்டால் அது காற்று தடுப்பானாக செயல்பட்டு, காற்றினால் ஏற்படும் சேதாரத்தை தடுக்கும்.
  •  சித்தகத்தி மரத்தை வாழைத் தோட்டத்தைச் சுற்றி நட்டால் அது காற்று தடுப்பானால் செயல்பட்டு, காற்றினால் ஏற்படும் சேதாரத்தைத் தடுக்கும்.
  • வாழை சீப்பு உள்ள கலனில் வேப்பிலையை இட்டால், 4 நாட்களில் பழுத்துவிடும்

மல்லிகை

  • நாட்டு மல்லி என்று அழைக்கப்படும் நாட்டு இரகம், பூ சிறியதாகவும், அதிக வாசனை உள்ளதாகவும் சிறிய காம்புள்ள மல்லிகைப்பூ வாசனைப் பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது.
  • ஒவ்வொரு வருடமும், தொழுஉரம் அல்லது ஆட்டை கிடை போடுவதால் மண்ணின் வளத்தை சேமிக்கலாம்.
  • அனைத்து விதமான பூச்சிகளை கட்டுப்படுத்த, மல்லிகைக்கு, 1 கிலோ அரளி பழத்தை ஒரு நாள் நீரில் ஊறவிட்டு பின் அதை கசக்கி, சாறு எடுத்து அதை தண்ணீருடன் 1க்கு 10 என்ற விகிதத்தில் கலந்து தெளிக்கலாம்.
  • 5 கிலோ ‘ஒடுவன்தலை’ இலை, கிளைகளை 2 லிட்டர் நீரில் கொதித்து வைத்து, அது ஒரு லிட்டர் ஆக குறையும் வரை கொதிக்க வைத்து அதில் 50 மிலிக்கு 15 லிட்டர் நீர் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு மல்லிகைத்தோட்டத்திற்கு அடித்தால் அனைத்து விதமான பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்தும்.
  •  நூற்புழு தாக்கத்தை கட்டுப்படுத்த 150 கிராம் வேப்பம்புண்ணாக்கு பவுடர் ஒவ்வொரு செடிக்கு இடவேண்டும்.
  • நவம்பர் - டிசம்பர் மாதங்களில் மல்லிகை செடியை கவாத்து செய்யும் போது ஆட்டுக்கிடை அமர்த்தினால், ஆடுகள் பழைய இலைகளை உண்டு விடும். இதனால் புதிய தளிர்கள் உருவாக வாய்ப்புக்கள் உண்டாக்கும்.

தக்காளி

  • சோற்றுக் கற்றாழை, துளசி மற்றும் ஆடு தின்ன பாளை செடிகளின் சாற்றை தயார் செய்து, தக்காளி செடி மீது தெளித்தால் எல்லாவிதமான பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்துவதோடு, பூ உதிர்தலையும் குறைக்கலாம்.
  • 20மிலி காகித பூ இலைச் சாற்றில் ஒரு லிட்டர் நீர் கலந்து தக்காளி விதைகளை 6 மணி நேரம் ஊறவைத்து விதைத்தால் நாற்றாங்காலில் நாற்று அழுகல் நோய் வராது.
  • 25-30 நாட்கள் ஆன நாற்றுக்களை நடவுக்கு பயன்படுத்தவேண்டும்.
  • பூ உதிர்தலை குறைக்க, வேப்பம் எண்ணெயை தெளிக்கலாம்.
  • பூ உதிர்தலை குறைக்க சூளைச் சாம்பல் தோட்டத்தைச்சுற்றி நட்டால் நூற்புழு தாக்குதல் கட்டுப்படும்.
  • செண்டுமல்லி செடியை தக்காளி தோட்டதததைச் சுற்றி நட்டால் நூற்புழு தாக்குதல் கட்டுப்படும்.
  • காய் துளைப்பானை தடுக்க, பூண்டு அல்லது வெங்காய செடியை வரப்பு பயிராக நடவு செய்தல் வேண்டும்.
  • பென்சோயின் கொண்டு பூக்கும் போது காலை, மாலை வேளைகளில் புகை மூட்டினால் காய் துளைப்பான் மற்றும் அசுவினி தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.
  • வேப்பம் புண்ணாக்கு உடன் ஆட்டுப் புழுக்கையை கலந்து வயலில் இட்டால் இலைப்பேன் தாக்கம் கட்டுப்படும்.
  • காலை வேளையில் சாம்பலைத் தக்காளிச் செடிக்குத் தூவினால் இலைப்பேன் மற்றும் அசுவினி தாக்குதல் கட்டுப்படும்.
  • அனைத்து வித பூச்சிகளையும் கட்டுப்படுத்த 11/2 கிலோ சாம்பலை சாணியுடன் கலந்து தெளித்தல் வேண்டும்.
  • சர்வோதய சோப் கரைசலை இலைகளின் மீது தெளித்தால், மாவுப் பூச்சியின் முட்டை மீது படிந்து இறந்து விடும்.

Saturday, May 10, 2014

வேப்பங்கொட்டை கரைசல் தயாரித்தல்

வேப்பங்கொட்டை கரைசல் தயாரித்தல் (5 % கரைசல்)
தேவையான பொருட்கள்
நூறு லிட்டர் 5 % வேப்பங்கொட்டை கரைசல் தயாரிப்பதற்கு
  • நன்றாக உலர்ந்த வேப்பங்கொட்டைகள் - 5 கிலோ
  • தண்ணீர் (நல்ல தரமான) – 100 லிட்டர்
  • சோப்பு - 200 கிராம்
  • மெல்லிய மஸ்லின் வகை துணி - வடிகட்டுவதற்காக
செய்முறை
  • தேவையான அளவு வேப்பங்கொட்டைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் (5 கிலோ).
  • நன்றாக பவுடராகும் வரை வேப்பங்கொட்டைகளை கவனமாக அரைக்க வெண்டும்.
  • இரவு முழுவதும் அரைத்த கொட்டைகளை பத்து லிட்டர் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும்.
  • மரத்தாலான கரண்டியைக் கொண்டு காலை நேரத்தில், கரைசல் நிறம் பால் போன்ற வெண்மையாகும் வரை நன்றாகக் கலக்கி விட வேண்டும்.
  • இரண்டு அடுக்கு மெல்லிய மஸ்லீன் துணியைக் கொண்டு கரைசலை வடிகட்டி அதன் அளவை நூறு லிட்டராக ஆக்க வேண்டும்.
  • இதனுடன் 1 சதவிகிதம் சோப்பு சேர்க்க வேண்டும் (முதலில் சோப்பை ஒரு பசையைப் போலாக்கி பின்பு கரைசலுடன் கலக்க வேண்டும்)
  • பின்பு கரைசலை நன்கு கலக்கிவிட்டு உபயோகிக்க வேண்டும்.
குறிப்பு
  • வேப்பம் கொட்டைகள் அதிகமாகக் கிடைக்கும் காலத்தில் ஒன்று சேர்த்து காற்றுபட நிழலில் உலர்த்த வேண்டும்.
  • எட்டு மாதத்திற்கும் மேற்பட்ட வேப்பம் விதைகளை உபயோகித்தல் கூடாது. எட்டு மாதத்திற்கும் மேல் சேமித்து வைக்கப்பட்ட வேப்பம் விதைகள் தங்களுடைய செயல்படும் திறனை இழக்கக் கூடிய சாத்தியம் இருப்பதால், அவைகள் வேப்பங்கொட்டை சாறு தயாரிப்பதற்கு ஏற்றதாய் இருக்காது.
  • எப்பொழுதும் புதிதாக தயாரித்த வேப்பங்கொட்டை கரைசலையே பயன்படுத்த வேண்டும்.
  • மதியம் 3.30 மணிக்கு பின்பு வேப்பங்கொட்டை கரைசலை தெளிப்பது மிகுந்த பலனைக் கொடுக்கும்.
Top of Form

Bottom of Form



Friday, May 09, 2014

விதை முளைப்புத்திறன் மற்றும் விதையின் தரம் பாதிக்கப்படாமல் இருக்க

கோவை மாவட்டத்தில் தற்போது அதிக வெயில் நிலவுவதால் மண் மற்றும் காற்றில் வெப்பம் அதிகமாக உள்ளது. எனவே விதையின் தரம் மற்றும் முளைப்புதிறன் பாதிக்கும் வாய்ப்பு இருப்பதால் விவசாயிகள் கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். விவசாயிகள் விதை விற்பனை மையத்தில் இருந்து விதைகளை வாங்கி செல்லுகையில் அதிகமான வெயில்படாதபடி எடுத்துச்செல்ல வேண்டும். தோட்டத்தில் விதை இருப்பு வைக்கும் இடம், நேரடியாக சூரிய ஒளி படாதவாறு இருக்க வேண்டும். தக்காளி, மிளகாய் விதைகளை நடவு செய்யும் மேட்டு பாத்தி முறையில், பாத்தியை நன்றாக தண்ணீரில் நனைத்து விட்டு, விதைகளை நேர் வரிசையில் நடவு செய்ய வேண்டும்.மேட்டு பாத்தியை சூரிய ஒளி படாமல் நாற்று முளைக்கும் வரை, இயற்கை மூடாக்குகளான வைக்கோல்,தென்னை சோகைகளை கொண்டு மூடி வைக்க வேண்டும். பந்தல் காய்கறி சாகுபடியில் விதைகளை நேரடியாக விதைக்கும் போது, தண்ணீர் விட்டு மண் குளிர்ந்த பின் நடவு மேற்கொள்ள வேண்டும். மண்ணின் வெப்பத்தை தணிக்க இரண்டு நாட்கள் இடைவெளியில் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். மேலும் குழித்தட்டு முறையில் நாற்றுகளை உற்பத்தி செய்து நடவு மேற்கொண்டால் விதையின் முளைப்பு திறன் சீராகவும், அதிகமாகவும் இருக்கும்.இத்தகவலை கோவை விதை ஆய்வு துணை இயக்குனர் பொன்னுசாமி நடேசன் தெரிவித்தார்.

இயற்கை உரமாக பயன்படும் வெள்ளை பூண்டு கழிவு

பெரியகுளம் : பெரியகுளம் பகுதியில் வெள்ளைப்பூண்டு கழிவுகளை, இயற்கை உரமாக விவசாயிகள் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது.
பெரியகுளம் அருகே வடுகபட்டி, தாமரைக்குளம் பகுதிகளில் வெள்ளைப்பூண்டு கழிவுகளை இயற்கை உரமாக அதிகளவில் பயன்படுத்துகின்றனர். இன்றைய சூழ்நிலையில் விவசாயிகள், உடனடி விளைச்சலுக்காக, தொடர்ச்சியாக வேதியியல் உரங்களை, அதிகளவில் பயன்படுத்துகின்றனர். தொடர்ந்து, ரசாயன உரங்கள் பயன்படுத்தப்பட்ட நிலம், ஐந்தாண்டுகளுக்கு பிறகு வளம் குறைந்து விளைச்சல் பாதிக்கிறது. அதன் பிறகு விவசாயிகள் மண் பரிசோதனை செய்து மண்ணின் வளத்தை அதிகப்படுத்த சிரமப்படுகின்றனர்.
சிறிதளவாவது இயற்கைக்கு மாறும் விவசாயிகள் மண்ணை உழுது, இயற்கை உரங்களான கால்நடை கழிவுகள், புண்ணாக்கு கரைசல், கீரைச்செடிகளை போட்டு பயிர் செய்கின்றனர். இலவசமாக கிடைக்கும் இயற்கை உரமான வெள்ளைப்பூண்டு கழிவுகளை பயன்படுத்தி, அதிகளவு விளைச்சல் பெறுகின்றனர்.விவசாயி முருகன் கூறுகையில், ""வெள்ளைப்பூண்டின் அனைத்து பகுதிகளும் பயன்படுத்தப்படுகிறது. இலவசமாக கிடைக்கும் வெள்ளைப்பூண்டு கழிவுகளை சேகரித்து, நிலத்தில் கொட்டி உழும் போது, மண்ணில் தீங்கு விளைவிக்கும் வேர்புழுக்கள் சாகுகின்றன. மண்ணின் வளமும் அதிகரிக்கிறது.இதனால் வாழை, கரும்பு, தென்னை உட்பட பல்வேறு வகையான பயிர்களும் விளைச்சல் அதிகரிக்கும் என்றார்.

Tuesday, February 04, 2014

சம்பங்கி சாகுபடி விவசாயிகளுக்குரூ.21 லட்சம் மானியம்

திருவாலங்காடு:ஒன்றியத்தில் சம்பங்கி பூ சாகுபடி செய்யும், 47 விவசாயிகளுக்கு, 21.78 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டது.திருவாலங்காடு ஒன்றியத்தில், திருவாலங்காடு, வீரராகவபுரம், கணேசபுரம், புளியங்கொண்டா, கூடல்வாடி, வேணுகோபாலபுரம், ஜாகீர்மங்கலம் ஆகிய பகுதிகளில், 80 எக்டேர் பரப்பளவில் சம்பங்கி பூக்கள் பயிரிடப்பட்டு உள்ளது.உயர் தொழில்நுட்ப உற்பத்தி திறன் திட்டத்தின் கீழ், சம்பங்கி பூக்கள் சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு, ஒரு எக்டேருக்கு, 7,500 ரூபாய் வீதம், தோட்டக் கலைத்துறை சார்பில் மானியம் வழங்கப் படுகிறது.அதன்படி, 2011-12ம் ஆண்டில் இத்திட்டத்தின் கீழ், 47 விவசாயிகளுக்கு மானியமாக, 21.78 லட்ச ரூபாய் வழங்கப்பட்டது. இவ்விழா திருவாலங்காடு ஒன்றிய அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. விழாவில், மாவட்ட தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் ரஞ்சன்பால், ஒன்றிய சேர்மன் குணாளன் கலந்துகொண்டு, விவசாயிகளுக்கு மானியத் தொகைக்கான காசோலைகளை வழங்கினர்.
thanks to dhinamalar

அலங்காநல்லூர் பகுதியில் சம்பங்கி பூ சாகுபடி

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் பகுதியில் ரோஜா, மல்லிகை, கேந்தி, கோழிக்கொண்டை உள்பட பல பூ வகைகளை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.
 
இதில் பாலமேடு, குட்டிமேக்கி பட்டி, தாதக்கவுண்டன் பட்டி, முடுவார்பட்டி, கொண் டையம் பட்டி, வலசை, எர்ரம்பட்டி உள்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் பூச்செடிகள் பயிரிடப்பட்டுள்ளன.
 
முக்கிய பங்கும், தனி கிராக்கியும் கொண்ட சம்பங்கி பூவும் இப்பகுதியில் சாகுபடி செய்யப்பட்டு அறுவடை செய்யப்பட்டு வருகிறது. வைகாசி மற்றும் ஆனி மாதங்களில் திருமணம், திருவிழா நிகழ்ச்சிகள் அதிகம் நடைபெறுவதால் இந்த கமகமக்கும் சம்பங்கி பூ மாலைக்கும் தனி மவுசு உண்டு.
 
இந்த பூவுக்கு நல்ல விலை கிடைப்பதோடு அரசின் மானியமும் கிடைக்கிறது. ஒரு ஹெக்டேருக்கு ரூ.15 ஆயிரம் வரை மானியமாக வழங்கப்படுகிறது. இதில் ரூ.7,500-க்கு உர வகைகளும் ரூ.7,500-க்கு பராமரிப்பு செலவுக்கு வழங்கப்படுவதால், விவசாயிகள் இந்த பூவை ஆர்வத்துடன் விரும்பி நடவு செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
 

சம்பங்கி மலர் சாகுபடி

பெங்களூரு அசர்கட்டா தேசிய தோட்டக்கலை ஆராய்ச்சி மையத்தின் ரகங்கள் ஸ்ரீகாசி, சுகாஷினி, பிராஜ்வால், வைபோவ். பட்டம்- மே, ஜூன், ஜூலை மாதங் கள். ஒரு ஏக்கருக்கு 300 கிலோ விதை தேவைப் படும். எல்லா வகை மண் ணிலும் பொதுவாக வடிகால் வசதி உள்ள மண் ணில் வளரக் கூடியது. தொழு உரம்ஏக்கருக்கு20 டிப்பர் இட்டால் போதும். மேல் உரமாக 20,20:0:13 அல்லது இயற்கை வழி உரமானதழை, மணி சத்துக்கள் கொண்ட உர வகைகளை இடவேண்டும். நிலத் தின் தன்மைக்கு ஏற்பவும், நல்ல வடிகால் வசதி உள்ள வாறும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
பொதுவாக சம்பங்கி ஒரு கிழங்கு வகை பயிராக இருப்பதால் மழைக் காலங்களில் கிழங்கு அழுகல் வரும். இதற்குசூடோமோனாஸ், டிரைகோ டெர்மா விரிடி ஆகிய உயிர் உரங்களை இட்டு பாதுகாக்க வேண்டும். நட்ட 3 மாதங்களில் ஒரு சில இடங் களில் அங்கொன்றும் இங் கொன்றும் வரும். 9 மாதத் தில் மகசூல் குறையும். ஏக்கருக்கு சுமார் 5 முதல் 6 டன் பூ மகசூல் வரும்.

வீரிய சம்பங்கி:

விதை கிழங்கு பெரியது. பூக்கள் பெரியது. பூ எடை அதி கம். பூ மொட்டு பெரியது. கிளைக்கும் தன்மை அதிகம். நீண்டநாள் சாகுபடி. மகசூல் அதிகம்.
நாட்டு சம்பங்கி: விதை கிழங்கு சிறியது. பூக்கள் சிறியது. எடை குறைவு. பூ மொட்டு சிறியது. கிளைக்கும் தன்மை குறைவு. குறைவு நாட்கள். மகசூல் சுமார். பூக்களின் எண்ணிக்கை குறைவு. நோய் எதிர்ப்பு சக்தி குறைவு. மேலும் விபரங்களுக்கு: 9787119420

சம்பங்கி + விரிச்சிப் பூ... லாபக் கூட்டணி


பெரும்பாலான இயற்கை விவசாயிகள், தங்கள் விளைநிலங்களையே ஆராய்ச்சிக் களங்கள் என மாற்றி, பல்வேறு சோதனை முயற்சிகளை மேற்கொண்டு.. தங்களுக்கான தொழில்நுட்பங்களையும், புதிய யுக்திகளையும் கண்டுபிடிப்பது வழக்கம். திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகா வெங்கடாசலபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜ், அத்தகையோரில் ஒருவர்.
இவர், விரிச்சிப் பூ செடிகளுக்கிடையே, சோதனை முயற்சியாக சம்பங்கியை ஊடுபயிராக சாகுபடி செய்து, வெற்றிகரமாக மகசூல் எடுத்திருக்கிறார். சுந்தர்ராஜை சந்தித்தபோது.. மொத்தம் இரண்டரை ஏக்கர் நிலம் இருக்கு. செம்மண்ணும் மணலும் கலந்த பூமி. ஒன்றரை ஏக்கரில் சம்பங்கி, 40 சென்ட்டில் செண்டுமல்லி என்று சாகுபடி செய்கிறேன். மீதி இருக்கும் 60 சென்ட்டில்தான் விரிச்சியும் அதில் ஊடுபயிராக சம்பங்கியும் போட்டிருக்கிறேன்.
எனக்கு தெரிந்த வரைக்கும் விரிச்சியில், யாரும் சம்பங்கியை ஊடுபயிராக போட்டதில்லை. மூன்று வருடத்திற்கு முன் சோதனை முயற்சியாக... 20 சென்ட்டில் மட்டும் இரண்டையும் பயிர் செய்தேன். அதில் இரண்டரை வருடம் வரைக்கும் சம்பங்கியில் நல்ல மகசூல் கிடைத்தது. கிட்டத்தட்ட ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் சம்பங்கியிலேயே வருமானம். இப்போது விரிச்சியில் தினமும் பத்து கிலோ அளவிற்கு பூ கிடைக்கிறது. அது மூலமாக தினமும் 750 ரூபாய் வருமானம் கிடைக்கிறது. இந்த இரண்டு பயிரும் ஒன்றுக்கொன்று துணையாக அமைந்து நல்ல மகசூல் கிடைப்பதால்.... அடுத்த 40 சென்ட்டிலும்  இந்த இரண்டையுமே போட்டிருக்கிறேன்.
களைகளைக் கட்டுப்படுத்த பாலிதீன்!
சாகுபடி நிலத்தில் 4 சால் உழவு ஓட்டி, 40 சென்ட் நிலத்திற்கு 10 டன் மாட்டு எரு என்ற கணக்கில் போட்டு, மீண்டும் 2 சால் உழவு ஓட்ட வேண்டும். இரண்டே முக்கால் அடி அகலம்,  முக்கால் அடி உயரம் என முக்கால் அடி இடைவெளியில், பார்களை அமைக்க வேண்டும். பாரின் மீது 3 அடி அகலம் கொண்ட பாலிதீன் விரிப்புகளை விரித்து... அதன் மேல் 20 அடி இடைவெளிக்கு ஒரு சுழலும் திறப்பான் உள்ளவாறு தெளிப்பு நிர்ப் பாசனம் அமைக்க வேண்டும். நடவு மற்றும் விதைப்பு செய்ய வேண்டிய இடங்களில் மட்டும் 3 இஞ்ச் குழாய் ஒன்றைப் பயன்படுத்தி பாலிதீன் விரிப்பில் துளை உருவாக்கிக் கொள்ள வேண்டும். இதனால், களைகள் வளர்வதேயில்லை.
பாரின் நடுவில் 8 அடி இடைவெளியில் விரிச்சி நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். பாரின் இரு ஓரங்களிலும் ஒன்றரையடி இடைவெளியில்  சம்பங்கிக் கிழங்கை நடவு செய்ய வேண்டும். மண்ணின் ஈரத்தன்மைக்கு ஏற்ப பாசனம் செய்தால் போதுமானது. விதைத்த 15-ம் நாளிலிருந்து மாதம் ஒரு முறை 200 லிட்டர் அமுதக்கரைசலலை வடிகட்டி தெளிப்பு நீர் வழியாகத் தர வேண்டும்.
30-ம் நாள் தலா ஒரு கிலோ அசோஸ்பைரில்லம், பாஸ்போ – பாக்டீரியா, சூடோமோனஸ் ஆகியவற்றை 50 லிட்டர் தண்ணீரில் கலந்துத் தெளிக்க வேண்டும். 40 –ம் நாள் ஒரு கிலோ ட்ரைக்கோ டெர்மாவிரிடியை 50 கிலோ மாட்டு எருவில் கலந்து, செடிகளைச் சுற்றிலும் தூவ வேண்டும். 50-ம் நாள் அரை லிட்டர் தேங்காய் பாலில் 3 லிட்டர் மோர், ஒரு கிலோ வெல்லம் கலந்து இரண்டு நாட்கள் வைத்திருந்து... அதோடு ஒரு கிலோ சூடோமோனஸ், 50 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும். இதனால், செடியின் வளர்ச்சி வேகமெடுப்பதோடு, பூஞ்சணத் தாக்குதலும் கட்டுப்படும்.
65-ம் நாளில் இருந்து இரண்டரை லிட்டர் மூலிகைப் பூச்சிவிரட்டியை, 50 லிட்டர் தண்ணீரில் கலந்து மாதம் ஒரு முறை தெளித்து வர வேண்டும். சம்பங்கயில் 65-ம் நாளில் பூ பூக்கத் தொடங்கும். 100 –ம் நாள், 200 கிலோ மண்புழு உரத்தை செடிகளின் தூரில் தூவ வேண்டும். 120-ம் நாள் 100 கிலோ ஆமணக்குப் பிண்ணாக்கு, 30 கிலோ வேப்பம் பிண்ணாக்கு ஆகியவற்றைக் கலந்து தூவ வேண்டும். 130-ம் நாளில் இருந்து மாதம் ஒரு முறை ஒரு லிட்டர் பஞ்சகவ்யாவை 50 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்து வர வேண்டும்.
10 வருடம் வரை விரிச்சி!
ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு கால் கிலோ அளவிற்க்குத்தான் சம்பங்கி பூ கிடைக்கும். மகசூல் படிப்படியாக அதிகரித்து 90-ம் நாளுக்கு மேல் ஒரு நாளைக்கு ஒரு கிலோ வரைக்கும் பூ கிடைக்க ஆரம்பிக்கும். இரண்டரை வருடம் வரைக்கும் சம்பங்கியில் மகசூல் பார்க்கலாம். அதற்குப் பிறகு விரிச்சிச் செடிகள் நாலரையடி உயரத்திற்கு வளர்ந்து படர ஆரம்பிக்கும். அப்போது நிழல் கட்டிடுவதால் சம்பங்கியில் மகசூல் நின்றுவிடும். அப்போது சம்பங்கிச் செடியை அடிக்கிழங்கோடு பிடுங்கி, இலை, குச்சிகளை வெட்டிவிட்டு விதைக்கிழங்காக விற்றுவிடலாம். விரிச்சி மூலமாக 10 வருடம் வரைக்கும் வருமானம் கிடைக்கும் என
ஆதாரம்: பசுமை விகடன் வெளியீடு 25.11.12 www.vikatan.com

Monday, February 03, 2014

திருப்புத்தூரில் "சம்பங்கி' சாகுபடி

திருப்புத்தூர்,: திருப்புத்தூர் பகுதியில் சம்பங்கிப் பூ சாகுபடியை தோட்டக்கலைத்துறையினர் அறிமுகப்படுத்தியுள்ளனர்.திருப்புத்தூர் பகுதியில் சம்பங்கிப் பூ சாகுபடி நடைபெற்றதில்லை. தற்போது, நெற்குப்பை பொசலான் என்ற விவசாயிதோட்டத்தில் சம்பங்கி சாகுபடித் துவக்கியுள்ளனர். தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் மலர்கள் உற்பத்தி திறன் அதிகரிக்க, இரண்டரை ஏக்கருக்கு, ரூ 45 ஆயிரம் மானியத்துடன் இச்சாகுபடியை தோட்டக்கலைத்துறையினர் அறிமுகப்படுத்தியுள்ளனர்.மூன்று மாதத்தில் பூக்கும் சம்பங்கிச் செடி சாகுபடிக்கு, முதலில் மண் உழவு செய்து, பின்னர், தொழு உரம்,குப்பையிட்டு உழவு செய்ய வேண்டும். பின்னர் அரை அடிக்கு முக்கால் அடி பாத்தி கட்டி, அதில் முக்கால் அடி இடைவெளியில் கிழங்கை நடவேண்டும். ஏக்கருக்கு 40 ஆயிரம் கிழங்குகள் தேவைப்படும்.அடுத்த, 15நாட்களில் முதல் களை எடுக்க வேண்டும். பின்னர் டி.ஏ.பி. உரம் இடவேண்டும்.அடுத்த 20 நாட்களில்மேல் உரமாக பொட்டாஷ் இடவேண்டும்,மேலும்,யூரியா,வேப்பம் புண்ணாக்கு கலந்து இடலாம். வாரத்திற்கு இரண்டு தண்ணீர் விட வேண்டும். 90 நாட்களில், பூக்க துவங்கும். ஏக்கருக்கு 10 கிலோ வரை பூக்கும்.வாரத்திற்கு ஒரு முறை பறிக்கலாம்.மூன்று ஆண்டுகள் வரை பூக்கும். குறைவான தண்ணீர்,பராமரிப்பு செலவு கொண்ட சம்பங்கிப் பூ, திருப்புத்தூர் போன்ற பாசன வசதி குறைவான, மணல் கலந்த கரிசல் மண் மற்றும்
செம்மண் பகுதி விவசாயிகளுக்கு பலன் தரும் என்று தோட்டக்கலைத்துறையினர் கூறுகின்றனர்.
விபரங்களுக்கு, தோட்டக்கலை உதவி இயக்குநர்: 94436 20082, உதவி வேளாண் அலுவலர்: 9486276303 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
thanks to dinamalar

சம்பங்கி சாகுபடியில் தினமும் ரூ. 500 வருவாய் முகாசிபுலவன்பாளையம் பஞ். தலைவி சாதனை

சென்னிமலை: ஒரு ஏக்கர் சம்பங்கி மலர் சாகுபடி செய்து, தினமும், 500 ரூபாய்
வரை வருவாய் பார்க்கிறார் முகாசிபுலவன்பாளையம் பஞ்சாயத்து தலைவி ராதிகா.
சென்னிமலை யூனியன், முகாசிபுலவன்பாளையம் பஞ்சாயத்து தலைவராக இருப்பவர்
ராதிகா; விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். உள்ளாட்சி தேர்தல் வரை தீவிர
விவசாயியாகத்தான் இவரை, அனைவருக்கும் தெரியும். காய்கறி, மஞ்சள், வாழை,
கரும்பு போன்ற பயிர்களை சாகுபடி செய்து வந்த இவர், எட்டு மாதங்களுக்கு
முன், தோட்டக்கலை துறை அதிகாரிகளின் அறிவுறுத்தல் பேரில், ஒரு ஏக்கரில்
சம்பங்கி மலர் சாகுபடி செய்தார். தற்போது, சம்பங்கி மலர்கள்
பூத்துக்குலுங்கி மணம் வீசுகிறது.
தினமும் காலை 5 மணிக்கே சம்பங்கி மலர் அறுவடையை துவக்கி விடுகிறார். பத்து
கிலோ வரை அறுவடையாகிறது. கிலோ 50 ரூபாய்க்கு, வெள்ளோடு பூவியாபாரிகள்
வாங்கிச் செல்கின்றனர். பூ வியாபாரத்தில் தினமும், 500 ரூபாய் வரை வருமானம்
பார்த்து வருகிறார் ராதிகா.
அவர் கூறியதாவது:மற்ற பயிர்களை விட, அதிக வருமானம் தரும் தோட்டப்பயிராக
சம்பங்கி உள்ளது. தேர்தல் சமயத்தில் வயலை சரியாக பராமரிக்கவில்லை அதனால் பூ
அறுவடை குறைந்துள்ளது. நன்றாக பாரமரிப்பு செய்திருந்தால், தினமும் 15 கிலோ
வரை பூ கிடைக்கும். இன்னும் இரண்டு ஆண்டுகளில் விதை கிழக்கு எடுக்கலாம்.
அது, 15 ரூபாய் வரை விலை போகிறது. சம்பங்கி சாகுபடி செய்து கொஞ்சம்
உழைத்தால் போதும்; நல்ல வருமானம் பார்க்க முடியும், என்றார்.சம்பங்கிக்கு
மானியம்
சென்னிமலை தோட்டக்கலை உதவி இயக்குநர் ராமசுப்பிரமணியம் கூறியதாவது:வாசனை
திரவியம், மாலை, பூச்செண்டு தயாரிக்க, சம்பங்கி மலர்கள் பெருமளவில்
பயன்படுகிறது. இப்பூக்கள் இரண்டு வாரம் வரை வாடாது. ஏற்றுமதிக்கு ஏற்ற
மலர். மே முதல் ஆகஸ்ட் மாதம் வரை பயிர் செய்யலாம், அனைத்து வகையான
நிலங்களிலும் வளரும்.

ஹெக்டேருக்கு இரண்டு லட்சம் ரூபாய் வரை சாகுபடி
செலவாகும். முதல் ஆண்டில், 20 டன் மகசூலும், இரண்டாம் ஆண்டில், 25 டன்
மகசூலும் கிடைக்கும். தேசிய தோட்டக்கலை இயக்கத்திட்டத்தில், சம்பங்கி
சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு, 45 ஆயிரம் ரூபாய் மானியம்
வழங்கப்படுகிறது, என்றார்.
thanks to dinamalar

தெளிப்பு நீர் பாசனத்தில் சம்பங்கி சாகுபடி

காஞ்சிபுரம்:தெளிப்பு நீர் பாசனத்தில் சம்பங்கிபூ சாகுபடி செய்வதன் மூலம், நல்ல லாபம் பார்க்க முடிகிறது என, சேந்தமங்கலத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலையில் உள்ளது சேந்தமங்கலம். இக்கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஏழுமலை,38. இவர் தெளிப்பு நீர் பாசனம் மூலம், "பிரிஞ்சிவால் ஹை பிரீட்' ரக சம்பங்கிபூ சாகுபடி செய்துள்ளார். நடவு செய்த, 90வது நாள் முதல் பூக்கத் துவங்கும், நன்கு பராமரிக்கப்பட்டால், நான்கு ஆண்டுகள் வரை தொடர்ந்து பூக்கும்.
பாசன அமைப்பு
ஐந்து அடி உயரத்தில் பைப்புகள் நின்ற நிலையில் பொருத்தி, அதன் மேல் பகுதியில், தண்ணீர் வெளியில் வரும் கையில், "பட்டர்பிளை ஸ்பிங்லர்' சுழல்கள் அமைக்கப்பட்டிருக்கும். குழாய்கள் மூலம் தண்ணீர் பாய்ச்சும் போது, பட்டர்பிளை ஸ்பிங்லர் சுழன்று தண்ணீரை தூவும். 
சம்பங்கி சாகுபடிக்கு நிலத்தில் லேசான ஈரப்பதம் இருந்தால் மட்டும் போதும், செடி வீரியமாக வளரும். பட்டர்பிளை ஸ்பிங்லர் அமைக்க ஏக்கருக்கு, 35 ஆயிரம் ரூபாய் செலவாகும். நடவு செய்த அதே ஆண்டில் லாபத்தை ஈட்ட முடியாது.
இதுகுறித்து விவசாயி ஏழுமலை கூறுகையில், "வெளியூர் சென்றபோது, அங்கு தெளிப்பு நீர் பாசனத்தில் சம்பங்கி சாகுபடி செய்வதை பார்த்தேன். இதனால், அதேமுறையில் சாகுபடி செய்ய வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. 
இதற்கான, "பிரிஞ்சிவால் ஹை பிரீட்' ரக சம்பங்கி விதையை வாங்கி வந்து நடவு செய்தேன். இதற்கான செலவு, மற்ற பயிர்களைவிட கூடுதலாக தான் உள்ளது என்றாலும், லாபமும் அதிகம் தான்.
அதிக லாபம்
மேலும், பூவின் அளவும் பெரியதாகவே உள்ளது. அறுவடை செய்யப்படும் பூ, கிலோ 60 ரூபாய் முதல் சந்தை நிலவரத்திற்கு ஏற்றவாறு விற்பனைக்காக காஞ்சிபுரத்திற்கு அனுப்பி வைக்கிறேன். முகூர்த்த நாட்கள், திருவிழாக் காலங்களில், கிலோ 250 ரூபாய் வரையில் விற்கிறேன். 
இந்த சாகுபடி முடிந்து, வேறு பயிரை சாகுபடி செய்ய வேண்டும் என்றால், தெளிப்பு நீர் பைப்புகளை சேதாரமில்லாமல் அகற்றிவிட்டு, நிலத்தை நன்கு உழுதபின் மீண்டும் பொருத்திக் கொள்ளலாம். இந்த தெளிப்பு நீர் பாசனத்தில், அனைத்து விதமான பயிர்களை சாகுபடி செய்யலாம்,' என்றார்.
thanksto dhinamalar

குண்டுமல்லி

இயற்கைமுறையில் சாகுபடிசெய்து ஏக்கருக்கு ரூ.2 லட்சம் வரை லாபம் பார்க்கிறார் சத்தியமங்கலம் (ஈரோடு மாவட்டம்) அடுத்துள்ள சிக்கிரசம் பாளையத்தைச் சேர்ந்த விவசாயி ஓதிச்சாமி.
ஆடி முதல் மார்கழி வரை குண்டுமல்லி நடவுக்கு ஏற்ற பட்டம். கோடை உழவு செய்து 15 டன் தொழு உரத்தை பரவலாக இறைத்துவிட்டு, மறுபடியும் 2 முறை ஏர் உழவு செய்து, 4 அடி இடைவெளியில் பார் முறை பாத்திஅமைத்து, அரை அடி அகலம், ஒரு அடி ஆழம் கொண்ட குழிகளை 4 அடி இடைவெளியில் எடுத்து (ஏக்கருக்கு 2500 குழிகள்) 5 மாத வயதான நாற்றுக்களை குழிக்கு இரண்டாக பதியம் போட்டு மூடி உடனே நீர்பாய்ச்ச வேண்டும். ராமநாதபுரம் மாவட்டம்தங்கச்சிமடம்பகுதியிலிருந்துதான் தமிழகம் முழுவதும் மல்லி நாற்றுக்களை விவசாயிகள் வாங்கி வந்து நடுகிறார்கள் என்கிறார் விவசாயி. நாற்றின் விலை ஒரு ரூபாய்.

நடவு முடிந்ததும் வாரம் ஒரு முறை தண்ணீர் விடவேண்டும். சொட்டுநீர் பாசனம் அமைக்கலாம். முதல் 5 மாதத்திற்கு மாதம் ஒரு களை எடுக்க வேண்டும். 2 வது மற்றும் 5வது களைக்குப்பின் செடிக்கு 2 கிலோ வீதம் மண்புழு உரம் வைத்து பாசனம் செய்ய வேண்டும். தொடர்ந்து 2 மாதத்திற்கு ஒரு முறை 500 லிட்டர் கோ மூத்திரத்துடன் 50 கிலோ சாணத்தைக் கரைத்து பாசனத்தண்ணீரோடு கொடுக்கலாம். பூச்சி கட்டுப்பாட்டிற்கு மூலிகை பூச்சிவிரட்டி தெளிக்கலாம். நடவு செய்த 150ம் நாளில் பூ மொட்டுக்களை அறுவடை செய்யலாம். மேலும் விபரங்களுக்கு: ப.ஓதிச்சாமி, 97894 15898.
thanks to தினமலரின் விவசாயமலர்

விண்பதியம் மூலம் இயற்கை வேளாண்மையில் முருங்கை சாகுபடி


திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே பள்ளபட்டி கிராமத்தைச் சேர்ந்த சடையப்பன், இயற்கை வேளாண்மையில் செடி முருங்கையில் விண் பதியம் மூலம் சாகுபடி செய்துவருகிறார். அவருடைய சாகுபடி விபரம்:
               இப்பண்ணையில் உள்ள தோப்புகள் முழுவதும் இயற்கை வேளாண்மை முறையே மேற்கொள்ளப்படுவதால் இந்த ரகத்தின் பாரம்பரிய குணாதி சயங்கள் எதுவும் மாறாமல் காக்கப் படுகிறது. இயற்கை முறை பராமரிப்பு என்பதால் நோய் தாக்குதல் இல்லை. இப்பண்ணையில் உருவாக்கப்படும் முருங்கை கன்றுகளுக்கு, நன்கு பராமரிக்கப்பட்டு தாய்குணம் உள்ள, அதிக காய்பிடிப்பு தன்மையுள்ள மரத்தில் விண்பதியம் மூலம் நாற்றுகள் உருவாக்கப்படுகிறது. இத்தகு முறையில் உண்டான கன்றுகள் நடவு செய்த 6-7 மாதத்திலேயே காய்த்து பலன் தரத்தொடங்கிவிடுகிறது. காய்க்கத் தொடங்கிய முதலாண்டு இறுதிக்குள் ஒரு மரமானது குறைந்தது 50 கிலோ காய்கள் வரை கொடுத்துவிடுகிறது. இரண்டாம் ஆண்டில் 3 காய்க்கும் பருவமும் சேர்த்து ஒரு மரம் 200 கிலோவிலிருந்து 250 கிலோ வரையிலும் காய்கள் பெறலாம். சரியான பராமரிப்பு, அதாவது இயற்கை முறையில் எரு, மண்புழு உரம், இயற்கை நோய் கொல்லிகள் போன்றவற்றை பயன்படுத்தியவர்கள் ஆண்டிற்கு ஒரு மரத்திலிருந்து 300 கிலோ காய்கள் வரை மகசூல் எடுத்துள்ளனர்.
                ஒரு ஆண்டு காலம் மகசூல் தந்த மரங்களை தரையிலிருந்து சுமார் ஒரு மீட்டர் உயரத்தில் ஒரே மட்டமாக கவாத்து செய்தபின், வெட்டிய பகுதியில் போர்டோ கலவையை பூசி பூஞ்சாண நோய் வருவதைத் தவிர்க்கலாம். (100 கிராம் மயில் துத்தத்தையும் 100 கிராம் சுண்ணாம்பு கரைசலில் கலந்தவாறு ஊற்றி போர்டோ கலவை தயார் செய்ய வேண்டும்). இவ்வாறு கவாத்து செய்தபின் தண்டுப் பகுதியிலிருந்து கிளைகள் வளரத் தொடங்கும். பக்கவாதுகளில் நல்ல திடமான கிளைகள் 5 முதல் 7 மட்டும் விட்டுவைக்க வேண்டும். இப்படித் தோன்றும் கிளைகள் வளர்ந்து ஆறாம் மாதத்தில் பூக்கத் தொடங்கும். மீண்டும் எட்டாம் மாதம் முதல் பத்தாம் மாதம் வரையில் காய்கள் கிடைக்கும். அறுவடை முடிந்தபின் செடிகளை அடியுடன் அப்புறப்படுத்திவிட்டு மறுநடவு செய்யலாம். மொத்தத்தில் செடி முருங்கை மூன்று ஆண்டுகள் வரை பலனளிக்கும். ஒவ்வொரு முறை கவாத்து செய்தபிறகு பரிந்துரை செய்யப்பட்டு தழை, மணி, சாம்பல் சத்து உரங்களோடு மக்கிய தொழு உரம் இட்டு நீர் பாய்ச்ச வேண்டும். இச்செடி முருங்கையை சாகுபடி செய்ய ஒரு ஏக்கருக்கு சுமார் 2500-300 ரூபாய் வரை செலவாகிறது. ஒரு ஏக்கரிலிருந்து ஆண்டொன்றிற்கு குறைந்தபட்சம் 15,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். தொடர்புக்கு: கே.பி.எம்.சடையாண்டி, 97913 74087, 98650 78101. 
  thanks to தினமலரின் விவசாயமல