Monday, October 08, 2018

இயற்கை வேளாண்மையின் முக்கிய கோட்பாடுகள்''

பன்னாட்டு அளவிலான இயற்கை வேளாண்மை இயக்கம் (IFOAM) இயற்கை வேளாண்மையை, கீழ்க்கண்ட முக்கிய கோட்பாடுகளின் அடிப்படையில் விளக்குகிறது. (கீழ்கண்ட கோட்பாடுகள் அனைத்தும் ஒருசேர கடைபிடிக்கப்பட வேண்டும்).
  • நிலம், தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள் ஆகியவற்றின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு அவற்றை நீடித்து நிலைக்கும் வகையிலும் மேம்படுத்தும் வகையிலும் செயல்படவேண்டும் (ஆரோக்கியம் பற்றிய கோட்பாடு)
  • உயிர்ச்சூழல் மற்றும் சுழற்சிக்கேற்ப இயைந்து செயல்பட்டு சுற்றுச்சூழலின் வாழ்வியல்மேம்படஉதவ வேண்டும் (உயிர்ச்சூழல் பற்றிய கோட்பாடு)
  • வாழ்வியல் வாய்ப்புகளுக்கேற்பவும், பொதுவான சுற்றுப்புற சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறும் உறவுகளை ஏற்படுத்தி அவற்றுடன் நடுநிலையாக செயல்படவேண்டும் (நடுநிலையாக செயல்படுதல் பற்றிய கோட்பாடு).
  • நிகழ்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினருக்கும், சுற்றுப்புற சூழலுக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு கவனமாகவும் பொறுப்பாகவும் செயல்படவேண்டும் (பராமரிப்பு பற்றிய கோட்பாடு).

No comments: