Friday, January 30, 2015

தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம் சிறப்பு வானொலி



தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம் 107.4 என்கின்றஅலைகற்றில் விவசாய வளர்ச்சிக்காக ஒரு சிறப்பு வானொலி நிலையத்தைப் பல்கலைக்கழக வளாகத்திலேயே அமைத்துள்ளது.  இந்நிலைய நிகழ்ச்சிகள் காலை 10.30 மணி முதல் மதியம் 01.00 மணி வரை மே 2012 முதல் செயல்பட்டு வருகிறது.  சுமார் 10,000 விவசாயக் குடும்பங்கள் இந்நிகழ்ச்சியில் பயன்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்நிலைய நிகழ்ச்சிகள் வேளாண்மை, மீன்வளத்துறை, கால்நடைத்துறைமற்றும் தோட்டக்கலைத்துறை போன்றமுக்கிய விவசாயப் பகுதிகளைச் சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறது.  பட்டுப்பூச்சி வளர்ப்பு, பால்பண்ணை பராமரிப்பும் நிர்வாகமும், தென்னைக்கேற்ப சொட்டு நீர் பாசனம், இயற்கை வேளாண்மை, மழைநீரில் வேற்க்கடலை வேளாண்மை ஆகிய நிகழ்ச்சிகள் ஒரு சில முக்கய சிறப்பு நிகழ்ச்சிகள் ஆகும், கேள்வி பதில் நேர்க்கானல் நிகழ்ச்சிகள், அன்றாட சந்தை மற்றும் வானொலி தகவல் அறிக்கைகள். இந்நிலையத்தில் வெளியிடுகின்றனர். விவசாயிகளுக்கு சுகாதாரம், சுற்றுப்புறச் சூழல், கல்வி மற்றும் சமூக மேம்பாட்டுச் செய்திகளைத் தொகுத்துவழங்குகின்றனர். இந்நிகழ்ச்சியின் உரையாடலை agritech.tmu.ac.in/ community-radio/spl-routine-Program.html என்றவலைதள முகவரியில் அனைவரும் கேட்டு மற்றும் பதிவு செய்து கொள்ளலாம். இந்நிலையத்தை தொடர்பு கொள்ள 0422-6611383 என்றஎண்ணை தொடர்பு கொண்டு பங்கேற்க்கலாம்.இந்தவானொலித் தொடர்பு முறையை ஒரு முன்னோடியாகக் கருதி தொழில், சுற்றுபுறச் சூழல், கல்வி, குடும்ப நலம், சுகாதாரம் மற்றும் விஞ்ஞானம் ஆகிய துறைகள் பொருளாதார நிலையைக் கருதிக் கூட்டாக அல்லது தனியாகவோ வானொலி நிலையங்களை அமைத்து தேசிய ஒருமைப்பாட்டிற்கும், வளர்ச்சிக்கும் பாடுபட முனையளாம். தபால் மூலம் வானொலி நிலையத்தைத் தொடர்பு கொள்ள:
Director of Extension Education
TNAU,CBE  641 003
மின்னஞ்சல் – dme@tnau.ac.in