Sunday, May 11, 2014

வாழை

  • பழுக்காத வாழை இலையை பெரிய கலனில் / பாத்திரத்தில் இட்டு, ஊதுபத்தி கொளுத்தி அதன் மூடியை போட்டுவிட்டால், 12 மணி நேரத்திற்குள் பழுத்துவிடும்.
  • விரைவில் வாழைக் குலையை பழுக்க வைக்க, சுண்ணாம்பு கரைசலை அதன் மீது தெளித்தால் போதும்.
  • இலகுவாக பழுக்க வைக்க, குலைகளில் ஆங்காங்கு வேப்பிலையைச் சொருகினால் போதுமே.
  • 25 கிராம் வேப்பம் புண்ணாக்கு மற்றும் ஆமணக்கு புண்ணாக்கு கலந்து கலவையை ஒவ்வொரு மரத்தை நட்ட 6ம் நாளில் சுற்றிலும் இட்டால் பூச்சி தாக்குதல் கட்டுப்படுத்தும்.
  • இலைப்புள்ளி நோயைக் கட்டுப்படுத்த, நீர்த்த புகையிலை கரைசலை தெளிக்கலாம்.
  • அரை அடி உயரமுள்ள இரண்டரை கிலோ எடையுள்ள கிழங்கை விதைக்க பயன்படுத்தவேண்டும்.
  • கிழங்கு அழுகல் நோயை தடுக்க, வாழைக் கிழங்கை 100 லிட்டர் தண்ணீரில் 1 லிட்டர் வேப்ப எண்ணெய் கலந்த கரைசலில் மூழ்கவைத்து பின் நடவு செய்யப்பயன்படுத்த வேண்டும்.
  • கடலை புண்ணாக்கு இட்டால் வாழையை அதிக மகசூல் கிடைக்கும்.
  • வாழைக் குலையைச் சேமிக்கும் போது, ஏற்படும் வாழைப்பழ அழுகலை கட்டுப்படுத்த, வாழைக் குலை காம்பை 10 % துளசி இலைச்சாறு கரைசலிலோ 1% வேப்ப எண்ணெய் கரைசலிலோ நனைத்து பின் சேமிக்கவேண்டும்.
  • செண்டு மல்லியை வாழைத் தோட்டத்தைச் சுற்றி நட்டால் அது காற்று தடுப்பானாக செயல்பட்டு, காற்றினால் ஏற்படும் சேதாரத்தை தடுக்கும்.
  •  சித்தகத்தி மரத்தை வாழைத் தோட்டத்தைச் சுற்றி நட்டால் அது காற்று தடுப்பானால் செயல்பட்டு, காற்றினால் ஏற்படும் சேதாரத்தைத் தடுக்கும்.
  • வாழை சீப்பு உள்ள கலனில் வேப்பிலையை இட்டால், 4 நாட்களில் பழுத்துவிடும்

மல்லிகை

  • நாட்டு மல்லி என்று அழைக்கப்படும் நாட்டு இரகம், பூ சிறியதாகவும், அதிக வாசனை உள்ளதாகவும் சிறிய காம்புள்ள மல்லிகைப்பூ வாசனைப் பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது.
  • ஒவ்வொரு வருடமும், தொழுஉரம் அல்லது ஆட்டை கிடை போடுவதால் மண்ணின் வளத்தை சேமிக்கலாம்.
  • அனைத்து விதமான பூச்சிகளை கட்டுப்படுத்த, மல்லிகைக்கு, 1 கிலோ அரளி பழத்தை ஒரு நாள் நீரில் ஊறவிட்டு பின் அதை கசக்கி, சாறு எடுத்து அதை தண்ணீருடன் 1க்கு 10 என்ற விகிதத்தில் கலந்து தெளிக்கலாம்.
  • 5 கிலோ ‘ஒடுவன்தலை’ இலை, கிளைகளை 2 லிட்டர் நீரில் கொதித்து வைத்து, அது ஒரு லிட்டர் ஆக குறையும் வரை கொதிக்க வைத்து அதில் 50 மிலிக்கு 15 லிட்டர் நீர் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு மல்லிகைத்தோட்டத்திற்கு அடித்தால் அனைத்து விதமான பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்தும்.
  •  நூற்புழு தாக்கத்தை கட்டுப்படுத்த 150 கிராம் வேப்பம்புண்ணாக்கு பவுடர் ஒவ்வொரு செடிக்கு இடவேண்டும்.
  • நவம்பர் - டிசம்பர் மாதங்களில் மல்லிகை செடியை கவாத்து செய்யும் போது ஆட்டுக்கிடை அமர்த்தினால், ஆடுகள் பழைய இலைகளை உண்டு விடும். இதனால் புதிய தளிர்கள் உருவாக வாய்ப்புக்கள் உண்டாக்கும்.

தக்காளி

  • சோற்றுக் கற்றாழை, துளசி மற்றும் ஆடு தின்ன பாளை செடிகளின் சாற்றை தயார் செய்து, தக்காளி செடி மீது தெளித்தால் எல்லாவிதமான பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்துவதோடு, பூ உதிர்தலையும் குறைக்கலாம்.
  • 20மிலி காகித பூ இலைச் சாற்றில் ஒரு லிட்டர் நீர் கலந்து தக்காளி விதைகளை 6 மணி நேரம் ஊறவைத்து விதைத்தால் நாற்றாங்காலில் நாற்று அழுகல் நோய் வராது.
  • 25-30 நாட்கள் ஆன நாற்றுக்களை நடவுக்கு பயன்படுத்தவேண்டும்.
  • பூ உதிர்தலை குறைக்க, வேப்பம் எண்ணெயை தெளிக்கலாம்.
  • பூ உதிர்தலை குறைக்க சூளைச் சாம்பல் தோட்டத்தைச்சுற்றி நட்டால் நூற்புழு தாக்குதல் கட்டுப்படும்.
  • செண்டுமல்லி செடியை தக்காளி தோட்டதததைச் சுற்றி நட்டால் நூற்புழு தாக்குதல் கட்டுப்படும்.
  • காய் துளைப்பானை தடுக்க, பூண்டு அல்லது வெங்காய செடியை வரப்பு பயிராக நடவு செய்தல் வேண்டும்.
  • பென்சோயின் கொண்டு பூக்கும் போது காலை, மாலை வேளைகளில் புகை மூட்டினால் காய் துளைப்பான் மற்றும் அசுவினி தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.
  • வேப்பம் புண்ணாக்கு உடன் ஆட்டுப் புழுக்கையை கலந்து வயலில் இட்டால் இலைப்பேன் தாக்கம் கட்டுப்படும்.
  • காலை வேளையில் சாம்பலைத் தக்காளிச் செடிக்குத் தூவினால் இலைப்பேன் மற்றும் அசுவினி தாக்குதல் கட்டுப்படும்.
  • அனைத்து வித பூச்சிகளையும் கட்டுப்படுத்த 11/2 கிலோ சாம்பலை சாணியுடன் கலந்து தெளித்தல் வேண்டும்.
  • சர்வோதய சோப் கரைசலை இலைகளின் மீது தெளித்தால், மாவுப் பூச்சியின் முட்டை மீது படிந்து இறந்து விடும்.

Saturday, May 10, 2014

வேப்பங்கொட்டை கரைசல் தயாரித்தல்

வேப்பங்கொட்டை கரைசல் தயாரித்தல் (5 % கரைசல்)
தேவையான பொருட்கள்
நூறு லிட்டர் 5 % வேப்பங்கொட்டை கரைசல் தயாரிப்பதற்கு
  • நன்றாக உலர்ந்த வேப்பங்கொட்டைகள் - 5 கிலோ
  • தண்ணீர் (நல்ல தரமான) – 100 லிட்டர்
  • சோப்பு - 200 கிராம்
  • மெல்லிய மஸ்லின் வகை துணி - வடிகட்டுவதற்காக
செய்முறை
  • தேவையான அளவு வேப்பங்கொட்டைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் (5 கிலோ).
  • நன்றாக பவுடராகும் வரை வேப்பங்கொட்டைகளை கவனமாக அரைக்க வெண்டும்.
  • இரவு முழுவதும் அரைத்த கொட்டைகளை பத்து லிட்டர் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும்.
  • மரத்தாலான கரண்டியைக் கொண்டு காலை நேரத்தில், கரைசல் நிறம் பால் போன்ற வெண்மையாகும் வரை நன்றாகக் கலக்கி விட வேண்டும்.
  • இரண்டு அடுக்கு மெல்லிய மஸ்லீன் துணியைக் கொண்டு கரைசலை வடிகட்டி அதன் அளவை நூறு லிட்டராக ஆக்க வேண்டும்.
  • இதனுடன் 1 சதவிகிதம் சோப்பு சேர்க்க வேண்டும் (முதலில் சோப்பை ஒரு பசையைப் போலாக்கி பின்பு கரைசலுடன் கலக்க வேண்டும்)
  • பின்பு கரைசலை நன்கு கலக்கிவிட்டு உபயோகிக்க வேண்டும்.
குறிப்பு
  • வேப்பம் கொட்டைகள் அதிகமாகக் கிடைக்கும் காலத்தில் ஒன்று சேர்த்து காற்றுபட நிழலில் உலர்த்த வேண்டும்.
  • எட்டு மாதத்திற்கும் மேற்பட்ட வேப்பம் விதைகளை உபயோகித்தல் கூடாது. எட்டு மாதத்திற்கும் மேல் சேமித்து வைக்கப்பட்ட வேப்பம் விதைகள் தங்களுடைய செயல்படும் திறனை இழக்கக் கூடிய சாத்தியம் இருப்பதால், அவைகள் வேப்பங்கொட்டை சாறு தயாரிப்பதற்கு ஏற்றதாய் இருக்காது.
  • எப்பொழுதும் புதிதாக தயாரித்த வேப்பங்கொட்டை கரைசலையே பயன்படுத்த வேண்டும்.
  • மதியம் 3.30 மணிக்கு பின்பு வேப்பங்கொட்டை கரைசலை தெளிப்பது மிகுந்த பலனைக் கொடுக்கும்.
Top of Form

Bottom of Form



Friday, May 09, 2014

விதை முளைப்புத்திறன் மற்றும் விதையின் தரம் பாதிக்கப்படாமல் இருக்க

கோவை மாவட்டத்தில் தற்போது அதிக வெயில் நிலவுவதால் மண் மற்றும் காற்றில் வெப்பம் அதிகமாக உள்ளது. எனவே விதையின் தரம் மற்றும் முளைப்புதிறன் பாதிக்கும் வாய்ப்பு இருப்பதால் விவசாயிகள் கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். விவசாயிகள் விதை விற்பனை மையத்தில் இருந்து விதைகளை வாங்கி செல்லுகையில் அதிகமான வெயில்படாதபடி எடுத்துச்செல்ல வேண்டும். தோட்டத்தில் விதை இருப்பு வைக்கும் இடம், நேரடியாக சூரிய ஒளி படாதவாறு இருக்க வேண்டும். தக்காளி, மிளகாய் விதைகளை நடவு செய்யும் மேட்டு பாத்தி முறையில், பாத்தியை நன்றாக தண்ணீரில் நனைத்து விட்டு, விதைகளை நேர் வரிசையில் நடவு செய்ய வேண்டும்.மேட்டு பாத்தியை சூரிய ஒளி படாமல் நாற்று முளைக்கும் வரை, இயற்கை மூடாக்குகளான வைக்கோல்,தென்னை சோகைகளை கொண்டு மூடி வைக்க வேண்டும். பந்தல் காய்கறி சாகுபடியில் விதைகளை நேரடியாக விதைக்கும் போது, தண்ணீர் விட்டு மண் குளிர்ந்த பின் நடவு மேற்கொள்ள வேண்டும். மண்ணின் வெப்பத்தை தணிக்க இரண்டு நாட்கள் இடைவெளியில் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். மேலும் குழித்தட்டு முறையில் நாற்றுகளை உற்பத்தி செய்து நடவு மேற்கொண்டால் விதையின் முளைப்பு திறன் சீராகவும், அதிகமாகவும் இருக்கும்.இத்தகவலை கோவை விதை ஆய்வு துணை இயக்குனர் பொன்னுசாமி நடேசன் தெரிவித்தார்.

இயற்கை உரமாக பயன்படும் வெள்ளை பூண்டு கழிவு

பெரியகுளம் : பெரியகுளம் பகுதியில் வெள்ளைப்பூண்டு கழிவுகளை, இயற்கை உரமாக விவசாயிகள் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது.
பெரியகுளம் அருகே வடுகபட்டி, தாமரைக்குளம் பகுதிகளில் வெள்ளைப்பூண்டு கழிவுகளை இயற்கை உரமாக அதிகளவில் பயன்படுத்துகின்றனர். இன்றைய சூழ்நிலையில் விவசாயிகள், உடனடி விளைச்சலுக்காக, தொடர்ச்சியாக வேதியியல் உரங்களை, அதிகளவில் பயன்படுத்துகின்றனர். தொடர்ந்து, ரசாயன உரங்கள் பயன்படுத்தப்பட்ட நிலம், ஐந்தாண்டுகளுக்கு பிறகு வளம் குறைந்து விளைச்சல் பாதிக்கிறது. அதன் பிறகு விவசாயிகள் மண் பரிசோதனை செய்து மண்ணின் வளத்தை அதிகப்படுத்த சிரமப்படுகின்றனர்.
சிறிதளவாவது இயற்கைக்கு மாறும் விவசாயிகள் மண்ணை உழுது, இயற்கை உரங்களான கால்நடை கழிவுகள், புண்ணாக்கு கரைசல், கீரைச்செடிகளை போட்டு பயிர் செய்கின்றனர். இலவசமாக கிடைக்கும் இயற்கை உரமான வெள்ளைப்பூண்டு கழிவுகளை பயன்படுத்தி, அதிகளவு விளைச்சல் பெறுகின்றனர்.விவசாயி முருகன் கூறுகையில், ""வெள்ளைப்பூண்டின் அனைத்து பகுதிகளும் பயன்படுத்தப்படுகிறது. இலவசமாக கிடைக்கும் வெள்ளைப்பூண்டு கழிவுகளை சேகரித்து, நிலத்தில் கொட்டி உழும் போது, மண்ணில் தீங்கு விளைவிக்கும் வேர்புழுக்கள் சாகுகின்றன. மண்ணின் வளமும் அதிகரிக்கிறது.இதனால் வாழை, கரும்பு, தென்னை உட்பட பல்வேறு வகையான பயிர்களும் விளைச்சல் அதிகரிக்கும் என்றார்.