Tuesday, February 04, 2014

அலங்காநல்லூர் பகுதியில் சம்பங்கி பூ சாகுபடி

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் பகுதியில் ரோஜா, மல்லிகை, கேந்தி, கோழிக்கொண்டை உள்பட பல பூ வகைகளை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.
 
இதில் பாலமேடு, குட்டிமேக்கி பட்டி, தாதக்கவுண்டன் பட்டி, முடுவார்பட்டி, கொண் டையம் பட்டி, வலசை, எர்ரம்பட்டி உள்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் பூச்செடிகள் பயிரிடப்பட்டுள்ளன.
 
முக்கிய பங்கும், தனி கிராக்கியும் கொண்ட சம்பங்கி பூவும் இப்பகுதியில் சாகுபடி செய்யப்பட்டு அறுவடை செய்யப்பட்டு வருகிறது. வைகாசி மற்றும் ஆனி மாதங்களில் திருமணம், திருவிழா நிகழ்ச்சிகள் அதிகம் நடைபெறுவதால் இந்த கமகமக்கும் சம்பங்கி பூ மாலைக்கும் தனி மவுசு உண்டு.
 
இந்த பூவுக்கு நல்ல விலை கிடைப்பதோடு அரசின் மானியமும் கிடைக்கிறது. ஒரு ஹெக்டேருக்கு ரூ.15 ஆயிரம் வரை மானியமாக வழங்கப்படுகிறது. இதில் ரூ.7,500-க்கு உர வகைகளும் ரூ.7,500-க்கு பராமரிப்பு செலவுக்கு வழங்கப்படுவதால், விவசாயிகள் இந்த பூவை ஆர்வத்துடன் விரும்பி நடவு செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
 

No comments: