Tuesday, January 28, 2014

தாவர நூற்புழுக்கள் மேலாண்மை


உயர் ரக சம்பங்கி விதை கிளங்கு விட்பனைக்கு தொடர்புக்கு:9787119420

நாற்றங்கால்: மண் வெப்பமூட்டல்: சூரிய வெப்பம் அதிகமாக உள்ள மார்ச் முதல் ஜூன் மாதங்களில் 8 காஜ் பருமனுள்ள நிறமற்ற பாலிதீன் கொண்டு 25-40 நாட்களுக்கு மூடிவைத்தல். நூற்புழுக்களைத் தாங்கி, எதிர்த்து வளரும் தன்மையுடைய வகைகளைத் தேர்வு செய்தல். விதைநேர்த்தி செய்தல்: ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் புளூரசன்ஸ் அல்லது 4 கிராம் டிரைகோடெர்மா விரிடியை பயன்படுத்துதல்; வேர் உட்பூசணத்தை நாற்றங்காலில் சதுரமீட்டருக்கு 100 கிராம் வீதம் இடுதல்; நாற்றங்காலில் கார்போபியூரான்-ஜி குருணை மருந்தினை சதுரமீட்டருக்கு 10 கிராம் இடுதல். வயல்வெளி: கோடை உழவு: வயலை 2-3 முறை ஆழ உழவு செய்தல். நூற்புழுக்களை கவர்ந்திழுக்கும் பயிர்கள்: தட்டைப்பயிரை, பயிர் சாகுபடிக்கு முன் விதைத்து மண்ணிலுள்ள நூற்புழுக்கள் அப்பயிரால் கவர்ந்திழுக்கப்பட்ட பிறகு ஒரு மாதத்திற்குள் அப்புறப்படுத்தலாம். நூற்புழுக்களை அழிக்கவல்ல பயிர்கள்: கேந்தி, கடுகு போன்ற பயிர்களின் வேர்ப்பகுதியிலிருந்து வெளிப்படும் கசிவுப்பொட்கள் அழிக்க வல்லது. எனவே இப்பயிர்களை ஊடுபயிராக பயிர் செய்வதன் மூலம் நூற்புழுக்களை வெகுவாக கட்டுப்படுத்தலாம். வயலில் நீரைத் தேக்கிவைத்தல்: நன்செய் நிலங்களில் சாகுபடிக்கு முன்பாக சுமார் 3-4 மாதங்கள் நீரைத் தேக்கி வைக்கும்போது ஏற்படும் வேதியியல் நுண்ணுயிர் மாற்றத்தினால் வெளிப்படும் நச்சுப் பொருட்கள் நூற்புழுக்களை அழிக்கும் திறன் பெற்றவை. பயிர் சுழற்சி செய்தல்: தக்காளி, கத்தரி, வெண்டை போன்ற பயிர்களைப் பயிர் சுழற்சி செய்தல். பசுந்தாள் பயிர்களை சாகுபடி முறை தனிப்பயிராக வளர்த்து மடக்கி <உழுதல். நூற்புழு கொல்லிகள்: தக்காளி நாற்றுக்கள் நடவு செய்த 15 நாட்களுக்கு பிறகு கார்போபியூரான் -ஜி குருணை மருந்தினை ஏக்கருக்கு 33 கிலோ வீதம் தூவுதல்; வேப்பம் பிண்ணாக்கு, ஆமணக்குப் பிண்ணாக்கு, புங்கம் பிண்ணாக்கு ஆகியவற்றுள் ஏதாவது ஒன்றை ஏக்கருக்கு 500 கிலோ வரை மண்ணில் இடுதல். விலங்கு கழிவுகள்: சாண எரு, ஆட்டு எரு, கோழி எரு, மீன்கழிவு, பயிர்களின் கழிவுகள், தொழிற்சாலை கழிவுகள், கரும்பாலைக் கழிவுகள் ஆகியவற்றை தேவைக்கு ஏற்ற அளவில் இடுதல். உயிரினக் கலவைக் கொல்லிகள்: ஒரு எக்டருக்கு 25 கிலோ சூடோமோனாஸ் புளூரசன்ஸ் கலவையை 50 கிலோ தொழு உரத்துடன் கலந்து 2 நாட்களுக்கு நிழலில் வைத்து காலை, மாலை நேரங்களில் நீர் தெளித்து பின்னர் வயலில் இடுதல். நூற்புழுக்களின் தாக்குதலைப்பற்றி அறிய மண் வேர் மாதிரிகளை சோதனை செய்வது அவசியம். இதற்கு தமிழ்நாடு விவசாய பல்கலைக் கழகத்தின்கீழ் இயங்கும் கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, பெரியகுளம், மேட்டுப்பாளையம், திண்டிவனம், காஞ்சிபுரம், சிறுகமணி, கிள்ளிகுளம், கொடைக்கானல், ஊட்டி, தடியன்குடிசை ஆகிய நிலையங்களில் உள்ள நூற்புழு வல்லுனர்களை அணுகவும். தகவல்: பா.வெற்றிவேல்காளை, ச.சுப்பிரமணியன், ஏ.ஜே.ஜோனாத்தான், பயிர் பாதுகாப்பு மையம், த.வே.பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-641 003. -டாக்டர் கு.சௌந்தரபாண்டியன். நன்றி:தினமலர்

No comments: