Wednesday, January 29, 2014

சமவெளியில் முட்டைக்கோசு சாகுபடி


முட்டைக்கோசு நட்ட 80-வது நாள் முதல் அறுவடை. நடுவதாக இருந்தால் வீரிய ஒட்டு ரகம். பயிர் செய்தால் ஏக்கருக்கு 450 - 500 மூட்டைகள் (மூட்டை 90 கிலோ). ஏனைய உயர் விளைச்சல் ரகங்கள் ஏக்கர் ஒன்றுக்கு 50 -20 டன்கள். * அனைத்து மண் வகைகளிலும் சாகுபடி செய்வதற்கு ஏற்றது. இருப்பினும் முன் பருவ பயிர்களுக்கு வண்டல் மண் ஏற்றது. * பின் பருவ பயிர்களுக்கு களிமண் ஏற்றது. * பொதுவான சிறந்த வடிகால் உள்ள அனைத்து நிலங்களும் தேவைப்பட்டது. * மண்ணின் கார, அமிலத் தன்மையானது 6 முதல் 6.5 வரை அவசியம். * இவைகள் உற்பத்திக்கு 15 முதல் 20 டிகிரி தட்ப, வெப்பம் தேவை. இதற்கு மேல் போனால் வளர்ச்சி தடைபடும். சாகுபடி: ரகங்களை மூன்று வகையாக பிரிக்கலாம். * முன்பருவ காலப்பயிர் - ஜூலை - ஆகஸ்ட் மாதங்கள் (கோல்டன் ஏக்கர், ஹரிராணிகோல், பிரைடு ஆஃப் இந்தியா, பூசா முக்தா, கேப்டன்சேகன், மார்கரெட் மற்றும் எக்ஸ்பிரஸ்) * மிதவ பருவகால பயிர் - செப்டம்பர் (ரகங்கள் குளோரி ஆஃப் என் குசியன்) * பின் பருவ காலப்பயிர் - அக்டோபர் - நவம்பர் மாதங்கள் (ரகங்கள் பூசா டிரம் ஹெட் மற்றும் லேட் லார்ஸ்டிரம் ஹெட்) தனியார் நிறுவனங்கள் தயாரித்த ஒட்டு வீரிய ரகங்கள் ஆகும். விதையளவு 80 கிராம் / ஏக்கர். பிரபல ஸ்பிக் நிறுவனம் நாற்று விட்டு நட்டு இதர வழிமுறைகளை விவசாயிகள் நலனுக்காக தெளிவாக உதவி செய்கின்றது. இதுவொரு தொண்டு மனப்பான்மையில் தொடர்ந்து செய்து வருகின்றது. இடுபொருட்களை விலை கொடுத்து வாங்கலாம். இங்கு பணி செய்யும் அனுபவம் பெற்ற விஞ்ஞானிகள் உதவுகிறார்கள். பல சிறு விவசாயிகள் ஸ்பிக் நிறுவனம் அமைத்துள்ள நாற்றங்கால்களை நேரில் பார்த்து தரமான நாற்றுகள் தயார் ஆகி உள்ளது. தெரிந்து கொள்ளலாம். இங்கு பயிர்களுக்கு இயற்கை உரங்கள் தாராளமாக அளிக்கப்படுகின்றது. உரமிடுதல் நல்ல கவனத்தோடு பாசனம் செய்யப்படுகின்றது.

No comments: